Glossary entry

English term or phrase:

Shoals

Tamil translation:

திரள், கூட்டம், சிக்கல்கள்

    The asker opted for community grading. The question was closed on 2014-12-02 04:54:09 based on peer agreement (or, if there were too few peer comments, asker preference.)
Nov 28, 2014 05:46
10 yrs ago
English term

Proposed translations

+1
57 mins
Selected

திரள், கூட்டம், சிக்கல்கள்

ஷோல்ஸ் என்ற இச்சொல், ஆற்றுமடை அல்லது கடலின் கழிமுகப் பகுதி (முகத்துவாரப் பகுதியை), ஆறு கடலில் போய் கலக்கும் ஆழம் குறைந்த கடற் பகுதியையே குறிக்கும் விதமாகவே உருவாகியது. பின் அது மருவி அங்கு காணப்படும் மீன்களின் திரளைக் குறிக்கும் விதமாக உருவாகி, பின் கூட்டத்தை, அல்லது திரளைக் குறிக்கும் விதமாக ஆகியது. பின் அதுவே மக்கள் கூட்டம், மாணவர்கள் கூட்டம், வழக்கறிஞர்கள் கூட்டம் என மாறி மாறி குறிப்பிடலாயிற்று. இவ்விதமாக, இத்திரளே மொய்த்தல் என மாறு, ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொய்த்தால் எவ்விதம் இருக்குமோ அவ்விதமாக உங்களைச் சுற்றிலும், அநேகமான சட்ட மற்றும் நடைமுறை சார்ந்த சிக்கல்கள் திரண்டு வர, அதனை நீங்கள் உதவியின்றி சமாளித்து வர முடியுமா என்பதே இதன் பொருளாகும்.
Example sentence:

இதற்காக பல்வேறு எதிர்ப்புக்களும், சட்ட சிக்கல்களும் ஏற்ப டுத்தப்பட்ட சூழ்நிலையி லும் அந்த தட�

சட்ட சிக்கல்கள் அனைத்தையும் தனித்துப் போராடித் தகர்த்தெரிந்து வெற்றி கொண்டவர்

Note from asker:
Thank you so much
Peer comment(s):

agree AR Ashok kumar : விளக்கம் அருமை. Confidence level உங்களுக்கு 4, எனக்கு 5.
2 days 4 hrs
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "சூழிசைவு சார்ந்து பார்த்தால் நீங்கள் கொடுத்த மூன்று சொற்களுமே சரியாக உள்ளது . நன்றி ."
12 mins

பெருங்கூட்டம்

Shoals எனும் பதத்தை பெருங் கூட்டம், வரையறையற்ற ஒன்றாகக் குறிப்பிட்டோமானால், அக் கூட்டத்தின் பண்புகளை (தாறுமாறானது, சிக்கலானது, வெளியேறுவது சிரமம், எது சரியான வழி என்று தெரிந்து கொள்வது கடினம்) வெளிப்படுத்தி வாக்கியத்தை அமைக்க வேண்டும்.
Example sentence:

இக் குழப்பமான சட்டம் மற்றும் நடைமுறை வழக்கங்களில் உங்களால் தனித்து பயனிக்க இயலுமா?

இக் குழப்பமான சட்டம் மற்றும் நடைமுறைச் சிக்கல்களை உதவியின்றி சமாளித்துவிடுவீர்களா?

Note from asker:
Thank you so much
Something went wrong...
28 mins

தட்டுத்தடங்கல்

சட்டம் மற்றும் நடைமுறைகளை சாதாரண மனிதர்கள் அறிந்துவைத்திருப்பது அரிது. எனவே தான், இந்த ஐயப்பாட்டு வினா எழுப்பப்பட்டுள்ளது. NAVIGATE என்பதை இங்கே “COUNTER” அதாவது ”எதிர்கொள்ள” என்ற அர்த்தத்திலேயே புரிந்துகொள்ள வேண்டும்.
Example sentence:

இந்தச் சட்டம் மற்றும் நடைமுறை தட்டுத்தடங்கல்களை உங்களால் உதவியின்றி எதிர்கொள்ள இயலுமா?

Note from asker:
Thank you so much
Something went wrong...
43 mins

தடங்கல்கள்/முட்டுக்கட்டைகள்/சிக்கல்கள்

சட்ட மற்றும் நடைமுறைத் தடங்கல்களை யாருடைய உதவியுமின்றி ..
Note from asker:
Thank you so much
Something went wrong...
1 hr

மறைந்துள்ள இடர்கள்

மறைவாயுள்ள சட்ட மற்றும் நடைமுறை இடர்களை...
Note from asker:
thanks
Something went wrong...
1 hr

தடைகள்

We cannot deem the legal requirements and procedural wrangles as anyone of the suggestions except சிக்கல்கள் but even this term may not be correct when assistance is available. Hence, we may treat them as hurdles.
Note from asker:
Thank you so much
Something went wrong...
7 hrs

மொய்திரள்கள் / தடங்கல்கள்

Shoal = a large group of fish that feed and swim together, மீன் மொய்திரள்
(Oxford English-English-Tamil Dictionary)

விளக்கம்: இச்சொல்லின் நேரடிப் பொருள் திரண்டு மொய்க்கும் மீன் கூட்டம் என்பதாகும்.

இங்கே இது ஒரு மரபுத்தொடராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரபுத்தொடர்கள் ஒவ்வொரு மொழிக்கும் வெவ்வேறு விதத்தில் இருக்குமாதலின், இத்தகைய சொற்றொடர்களை மொழிபெயர்க்கும் போது அவை உள்ளவாறே மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. இவை ஆழமான பொருள் கொண்டவையாக இருப்பதனால், அவற்றுக்குக் கிட்டிய பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்துவதே நல்லது.

எனவே, இங்கே நேரடிப் பொருளைப் பயன்படுத்துவதாயின் மொய்திரள் என்றும், உட்பொருளைப் பயன்படுத்துவதாயின் தடங்கல்கள் என்றும் பயன்படுத்தலாம்.
Note from asker:
Thank you so much
Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search